search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவிசார் குறியீடு"

    பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    தேசிய கைத்தறி நாளையொட்டி பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட கைத்தறி பே‌ஷன் ஷோ இன்று கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி விவசாயத்துக்கு அடித்தபடியாக கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கைத்தறி ஆடை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கைத்தறி ஆடைகளை நாம் பயன்படுத்தினால் அது நெசவாளர்களை ஊக்கப்படுத்தும்.

    கடந்த ஆண்டு 40 கல்லூரிகளில் மக்கள் சேவை மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நாம் பயன்படுத்தும் ஆடைகளில் 30 சதவீதம் கைத்தறி ஆடை இருக்க வேண்டும். கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கு இந்துஸ்தான் கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், நடிகை மாளவிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படும் சீரக சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு பதிவு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு வக்கீல் சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், அறிவு சார் சொத்துரிமை அட்டார்னி தலைவருமான சஞ்சய்காந்தி தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 8-ந்தேதி அறிவுச்சார் சொத்துரிமை அட்டார்னி சங்கம் சார்பில் புவிசார் குறியீடு பதிவகத்தில் தமிழகத்தின் உள்ள தலை சிறந்த பாரம்பரியமிக்கமான நெல் வகையான சீரக சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு பதிவு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றுப்படுக்கையில் உள்ள நெல்வகைகளில், நெல்களின் தாய் என்று சீரக சம்பா அழைக்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்த அறிய வகையான நெல் பயிரிடப்பட்டு உள்ளன. இப்பழமையான நெல்வகை அழிந்து விடக்கூடாது இதனுடைய பூர்விக வரலாறு, தனிச்சிறப்பு, உற்பத்தி ஆகியவற்றையும், இதுதொடர்பான ஆய்வு ஆவணங்களையும் அறிவுசார் சொத்துமை அட்டார்னி சங்கம் சார்பில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நெல்வகை உரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்த நெல்வகை சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருச்சி, உப்பிலியபுரம் பகுதியில் அதிக அளவில் மகசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யோகிகளும் சித்தர்களும் பத்தாரத குணபாடம் என்ற புத்தகத்தில் இந்நெல்லின் மருத்துவ குணங்கள் பற்றி கூறுகிறார்கள்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் அருகில் உள்ள துறமாடி என்ற பகுதியில் இந்த நெல்வகை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு காவிரி டெல்டா பகுதிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இந்த அரிசி சீரகம் போன்று இருப்பததால் இதற்கு சீரக சம்பா அரிசி என்ற பெயர் அளிக்கப்படுகிறது. மற்ற அரிசி வகைகளையும் காட்டிலும் இந்த அரிசி வகைக்கு வாசனை அதிகம். மேலும் இந்த அரிசியை வைத்து தயாரிக்கும் பிரியாணி வகைக்கு தனி மவுசு அதிகம் ஆகயே இந்த வகையான அரிசியினை பிரியாணி வகையான அரிசி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த சீரக சம்பாவில் கொழுப்பினை குறைக்க கூடிய சக்தி உள்ளது என்று ஆராய்ச்சி கட்டுரை கூறுகிறது.

    ஆய்வறிக்கையில் புற்றுநோய் தடுக்கும் சக்தி, சர்க்கரை நோய் தடுக்கும் சக்தி, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கான சக்தி, இளைஞர்களை சுறுசுறுப்பாக இருக்கும் சக்தி, முதியோர்களுக்கு ரத்தத்தை சீராக்கும் சக்தி, முகம் வசிகரபடுத்தும் சக்தி, ஆகியவை இந்த பாரம்பரிய நெல் வகையில் இருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய நெல் வகைக்கு விரைவிலே புவிசார் குறியீடு கிடைக்கும்.

    அவ்வாறு கிடைத்தால் காவிரி டெல்டா அனைத்து விவசாயிகளும் பாரம்பரியமாக அந்த வேளாண்மை அறிவு களஞ்சியத்தை உலகளவில் நிலைநாட்டுவதற்கு உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×